சொந்த ஊருக்கு செல்ல ரயில் விடக்கோரி திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: சொந்த ஊருக்கு செல்ல ரயில் விடக்கோரி திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: சொந்த ஊருக்கு செல்ல ரயில் விடக்கோரி திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் ஊரடங்கு அறிவித்த பிறகு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்களில் ஒன்றரை லட்சம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகினர். ஆனால் பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவர்கள் செல்ல முடியவில்லை.



இதனால் இங்கேயே தங்கி சிரமப்பட்டு வந்ததாகவும் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரி திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பீகார், ஒடிசா, உத்திரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இவர்கள் உணவு மற்றும் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்றும் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப ரயில் விட வேண்டும் என்றும் கோரி கோஷமிட்டனர்.



அப்போது கணக்கெடுப்பு முடிந்து, மாநில அரசின் அனுமதியோடு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...