கோவையில் கடந்த 45 நாட்களாக மூடப்பட்டிருந்த மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை மீன் மார்க்கெட் மீண்டும் திறப்பு!

கோவை: கோவையில் கடந்த 45 நாட்களாக மூடப்பட்டு இருந்த மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை மீன் மார்க்கெட் சில விதிமுறைகளை பின்பற்றி இன்று முதல் செயல்பட அனுமதி பெற்று திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 45 நாட்களாக மூடப்பட்டு இருந்த மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை மீன் மார்க்கெட் சில விதிமுறைகளை பின்பற்றி இன்று முதல் செயல்பட அனுமதி பெற்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில். தற்பொழுது 144 தடை உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் அரசு சில தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில்கள் குறைந்த வேலையாட்களை பயன்படுத்தி தங்கள் தொழில்களை தொடர அனுமதி அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கோவை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கூடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் வியாபாரிகளும், அதைச்சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

இது குறித்து மீன்மார்க்கெட் சங்கத்தின் பொருளாளர் சிராஜ் கூறுகையில், 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 45 நாட்களாக மீன் மார்க்கெட் திறக்கப்படவில்லை. தற்பொழுது அரசு சிலவழி முறைகளை பின்பற்றி கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தினமும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் தனிமனித இடைவெளியுடன் மீன் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கின்றோம் என்றார்.

மேலும் தற்சமயம், தூத்துக்குடி போன்ற சில இடங்களில் இருந்து மட்டுமே மீன் வரத்து துவங்கியுள்ளது எனவும் இதனால் சற்று மீன்விலை அதிகமாக உள்ளது என்று தெரிவித்த அவர், மீன் வரத்து அதிகமாகும் பொழுது மீன் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...