கொரோனா பாதிப்பு இல்லை..! நிம்மதியடைந்த கோவை பத்திரிகையாளர்கள்

கோவை: கோவையில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மற்றும் பி.சி.ஆர் முறைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதால் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மற்றும் பி.சி.ஆர் முறைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதால் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

கொரோனாவின் கோரமுகம் தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, மற்றும் மும்பையில் சில பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சூழலில் அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொது மக்களுக்கு செய்திகளை வழங்குவதற்காக தினந்தோறும் பல இடங்களுக்கு செல்லும் பத்திரிகையாளர்கள் இந்த சம்பவங்களால் பீதியடைந்தனர். இதனால், தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவையை பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் ரேபிட் டெஸ் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பத்திரிகையாளர்கள் அனைவரும் 20 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு, சமூக விலகலை கடைபிடித்துசுகாதரத்துறையினர் மேற்கொண்ட இந்த பரிசோதனைகள் வெளியாகின. அதன்படி, யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால், அடுத்த சில தினங்களிலேயே ரேபிட் டெஸ்ட் கிட் நம்பகத்தகுந்த முடிவுகளை தருவதில்லை என்றும், அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து கோவையில் சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளியில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆர்.டி பி.சி.ஆர் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த பரிசோதனையில் நாளொன்றுக்கு நூறு என்ற கணக்கில் பத்திரிகையாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி நேரில் ஆய்வு செய்தார். மேலும், அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பணிபுரியும் போதும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

தொடர்ந்து ஆய்வு முடிவுகள் வெளியானது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதனால் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...