அமைச்சர்.எஸ்‌.பி. வேலுமணி தலைமையில் ரூ.184.75 லட்சம்‌ மதிப்பிலான கிருமிநாசினி மருந்து தெளிப்பான்‌ வாகனங்களின்‌ பணிகள் துவக்கம்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ ரூ.184.75 லட்சம்‌ மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிப்பான்‌ வாகனங்களின்‌ பணிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி அவர்கள் இன்று துவக்கிவைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ ரூ.184.75 லட்சம்‌ மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிப்பான்‌ வாகனங்களின்‌ பணிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி அவர்கள் இன்று துவக்கிவைத்தார்.



கோவை மாநகராட்சியின்‌ சார்பாக கொரோனா வைரஸ்‌ தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பிலான ஒரு வஜ்ரா இயந்திரமும்‌, ரூ.39.75 இலட்சம்‌ மதிப்பிலான டிராக்டருடன்‌ கூடிய இயந்திரங்கள்‌ மூன்றும்‌, ரூ.10 இலட்சம்‌ மதிப்பிலான ஜாக்டோ டிராக்டருடன்‌ கூடிய இயந்திரங்கள்‌ மூன்றும்‌, ரூ.115 இலட்சம்‌ மதிப்பிலான ஜெட்டிங்‌ இயந்திரங்கள்‌ இரண்டும்‌ ஆகமொத்தம்‌ ரூ.184.75 இலட்சம்‌ மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிக்கும்‌ வாகனங்களின்‌ பணிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப.,, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌, மற்றும்‌ அலுவலா்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ திரு.ஆ.இலட்சுமணன்‌ அவர்கள்‌, நகா்‌ நல அலுவலர்‌ மரு.கே.சந்தோஷ்குமார்‌ அவர்கள்‌, செயற்பொறியாளர்‌ திரு.சரவணக்குமார்‌ அவர்கள்‌ மற்றும்‌ அலுவலார்கள்‌ கலந்து கொண்டார்கள்

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...