மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் - காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப., பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப., பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து கள்ளு மற்றும் சாராயம் தயாரிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மே 3 ஆம் தேதி அன்று கோவை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் சோதனை நடத்தியதின் விளைவாக 45 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 22,.400 லிட்டர் சாராயம் மற்றும் 35 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றப்பட்டு 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 198.5 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டு 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாவட்ட அளவில் தொடர்ந்து சோதனை நடத்தி மதுவிலக்கு தொடர்பான குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...