திருப்பூர் மாவட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 6 ஆம் தேதி முதல் துவங்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 6 ஆம் தேதி முதல் துவங்க அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஏற்றுமதியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 6 ஆம் தேதி முதல் துவங்க அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஏற்றுமதியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களை துவக்குவது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில் ஏற்றுமதி மற்றும் அனைத்து தொழில் துறை அமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், 6 ஆம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் துவங்கலாம் எனவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த பணிகளையும் துவங்கக் கூடாது எனவும் தொழிலாளர்களை நிறுவனங்களே வாகனம் வைத்து அழைத்து வர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு அடிக்கடி தொழிலாளர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பூரில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவிப்பவர்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் அனுமதியோடு அவர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பேட்டியளித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று பணிகளை துவங்க இருப்பதாகவும் இந்த முறை திருப்பூருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தக்கூடிய முழு உடற்கவசம், முக கவசம் , கையுறைகள் தயாரிக்கக்கூடிய ஆர்டர்கள் அதிக அளவில் வரக்கூடிய சூழல் இருப்பதால் இந்த தளர்வை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...