கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர் சங்கத்தை சேர்ந்த 500 இக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஆதிதமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமானது நடைபெற்று வருகின்றது.
22 வார்டுகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு பணியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனை நடத்தவேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த இரட்டை சம்பளத்தை வழங்க வேண்டும், காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றுள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.