கோவை நகரில் வழக்கம்போல் திறக்கப்பட்ட அனைத்து கடைகளையும் உடனடியாக அடைக்குமாறு காவல் துறையினர் மைக் மூலம் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாதது கடைக்காரர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாதது கடைக்காரர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கோவை நகரில் பெரும்பாலான இடங்களில் இன்று கடைகள் திறக்கப்பட்டது. செல்போன், ஹார்டுவேர், எலக்ட்ரானிக் கடைகள் திறக்கப்பட்டன. சாலைகளில் வழக்கம் போல அனைத்து வாகனங்களும் இயங்க துவங்கின. மேலும் 40 நாட்களாக இயங்காமல் இருந்த சிக்னல்களும் இயங்க துவங்கின.

இந்நிலையில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால், இராமநாதபுரம், சிங்காநல்லூர் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் திறக்கப்பட்ட அனைத்து கடைகளையும் மூடும்படி காவல்துறை சார்பில் பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. காவல் துறை மைக் மூலம் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலை தொடர்ந்து திறக்கப்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு பின்னர் கோவை மாவட்டத்தில் எந்ததந்த கடைகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் ஏ.சி இருக்கும் கடைகள் கண்டிப்பாக திறக்க கூடாது எனவும் போலீசார் மைக் மூலம் அறிவித்தனர்.

மேலும், கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்க கூடாது, கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் போலீசார் மைல் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இன்று காலை திறக்கப்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...