காவலர் பயிற்சிப் பள்ளியில் 4வது பிரிவு பட்டாலியனுக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு 15 நாள் பயிற்சி இன்று துவங்கியது

கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 4 பிரிவு பட்டாலியனில் பணியாற்ற்வதற்கு 453 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் 125 காவலர்களுக்கான 15 நாள் பயிற்சி இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் தொடங்கியது.


கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 4 பிரிவு பட்டாலியனில் பணியாற்ற்வதற்கு 453 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் 125 காவலர்களுக்கான 15 நாள் பயிற்சி இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் தொடங்கியது.

இன்று பறிச்சிக்கு வந்தவர்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு மருத்துவர்கள் மூலம் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டன.

15 நாட்கள் பயிற்சிக்குப் பின் காவலர்கள் கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

வழக்கமாக 4வது பட்டாலியன் காவலர்களுக்கு 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தேர்வு செய்யபட்ட காவலர்களுக்கு 15 நாட்கள் மட்டும் பயிற்சி வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...