கோவை: பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் பெண்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தனியார் அறக்கட்டளை உதவியுடன் முக கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முகக் கவசம் அணியவும், சானிடரிகளை பயன்படுத்தி கைகளை சுத்தமாக கழுவவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து முக கவசத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
அதே சமயத்தில் பல்வேறு நிறுவனங்கள் முக கவசத்தை தயாரித்து அதிக விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கீ ஸ்டோன் பவுண்டேஷன்
(Keystone Foundation) சார்பில் கிராமப்புற அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் நான்கு பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் குறைந்த விலைக்கு முக கவசம் தயாரித்து விற்பனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டது.
இப்படி தேர்வுசெய்யப்பட்ட நான்கு பெண்கள் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக தினமும் 350 க்கும் மேற்பட்ட முக கவசங்களை தயாரித்து அறக்கட்டளை உதவியுடன் சந்தைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருவதுடன் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு முக கவசங்களை விற்பனை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்
பிரவீனா ஸ்டான்லி கூறும்போது:-
100% காட்டன் துணிகளை பயன்படுத்தி பிரத்தியேக முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதுடன் ஏழை எளிய பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் விற்பனையில் கிடைக்கும் லாபம் அனைத்தும் தயாரிப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு முழுவதும் கொடுக்கப்படுகிறது. அறக்கட்டளையினர் சார்பில் சந்தைப்படுத்துதல் மற்றும் பரிமாற்ற உதவிகள் மட்டுமே நடைபெறுகிறது என தெரிவித்தனர்.