வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவி வழங்கிய கஸ்தூரி வாசு எம்எல்ஏ

கோவை: வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.


கோவை: வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார். 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஊரடங்கு காரணமாக பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 



இவர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஸ்டான்மோர் பகுதியிலுள்ள 450 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கினார். 



இதனை தொடர்ந்து, சோலையார் எஸ்டேட் பகுதியிலுள்ள 150 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கினார். ஸ்டான்மோர் தேயிலை தோட்ட மத்திய அலுவலக வளாகத்தில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன் முன்னிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் தேயிலை தோட்ட தலைமை நிர்வாகி ரஞ்சித் கட்டப்புரம், கூட்டுறவு வங்கி தலைவர் அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன், கிராம நிர்வாக அலுவலர் வஜய் அமிர்தராஜ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...