கோவையை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா தொற்று உறுதி; தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம்

கோவை: கோவையில் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்த பலர் குணமடைந்து தொடர்ந்து வீடு திரும்பி வரும் நிலையில் இன்று மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்த பலர் குணமடைந்து தொடர்ந்து வீடு திரும்பி வரும் நிலையில் இன்று மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த முழு நடவடிக்கையின் பேரில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 141 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ சிகிச்சைகளுக்கு பின் பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கோவையில் மொத்தம் ஏழு பேர் இந்த தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளானவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவரென்றும், அவர் புற்றுநோய் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சந்தேகத்தின்பேரில் அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் ஆகியோர் சுகாதாரத்துறை கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்த பட்டுள்ளனர். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...