கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறையினர்!

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி மதியம் 1 மணிக்கு மேல் சுற்றி திரிந்தவர்களை கும்மி அடிக்க வைத்து சூலூர் காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.


கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி மதியம் 1 மணிக்கு மேல் சுற்றி திரிந்தவர்களை கும்மி அடிக்க வைத்து சூலூர் காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.

144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே சுற்றி திரிபவர்கள் மீது வாகன பறிமுதல், வாகனத்தில் வர்ணம் அடிப்பது உள்ளிட்ட நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர்.

இதனையும் மீறி இரு சக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்ப்பதில்லை. காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வரலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் கோவை சூலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கலங்கல் சாலையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது தேவையின்றி சுற்றி திரிந்த இளைஞர்களை பிடித்து வட்டமாக நிற்க சொல்லி கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனையை ஆய்வாளர் சவுந்தரபாண்டியன் வழங்கினார். 

கும்மியடித்தபடியே இளைஞர்கள் ஒரு மணிக்கு மேலே வெளியே வரமாட்டோம், விழித்திருப்போம், வீட்டில் இருப்போம், விலகி இருப்போம் என சொல்லியபடி இளைஞர்களை கும்மி அடிக்க வைத்த வீடியோ வெளியாகி உள்ளது. 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...