பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது!

திருப்பூர்: பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் அருகே மங்கலம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 



அப்போது, அவ்வழியாக வந்த ஸ்விப்ட் காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காரில் நிலவேம்பு கஷாயம் பொடியும், பிளாஸ்டிக் கவர்களில் 16 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, காரில் இருந்த நால்வரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த மங்கலம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 



விசாரணையில் சரவணன் ஜோதி, செல்வராஜ், மணிகண்டன், அருண் ஆகிய நால்வரும் வால்பாறை நகராட்சியில் பணி புரிந்து வருவதும், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் ஆத்தூருக்கு நிலவேம்பு கஷாயம் பொடி வாங்க வந்ததும் தெரியவந்தது. பொடி வாங்கிவிட்டு திரும்பி வரும் பொழுது அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது.

சாராயம் அருந்த ஆசைப்பட்ட அவர்கள் நால்வரும் 16 லிட்டர் சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த மங்கலம் காவல் துறையினர் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...