'இந்தியா வல்லரசாக நமது பங்களிப்பு ' என்னும் தலைப்பில் பொதுமக்கள் 50 ஆயிரம் பேரின் கருத்துகளை ஒலிப்பதிவு செய்த பி.எஸ்.ஜி சமுதாய வானொலி!

கோவை: இந்தியா வல்லரசாக மக்களின் பங்களிப்பு குறித்து 50 ஆயிரம் மக்களின் கருத்துகளை ஒலிபரப்பிய ரேடியோ ஹப் மாணவர்களின் முயற்சியோடு பி.எஸ்.ஜி சமுதாய வானொலி ஒலிபரப்பியது.

கோவை: இந்தியா வல்லரசாக மக்களின் பங்களிப்பு குறித்து 50 ஆயிரம் மக்களின் கருத்துகளை ஒலிபரப்பிய ரேடியோ ஹப் மாணவர்களின் முயற்சியோடு பி.எஸ்.ஜி சமுதாய வானொலி ஒலிபரப்பியது.

கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எஸ்.ஜி சமுதாய வானொலி 107.8 பண்பலை தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் மக்களுக்கான மருத்துவம், உளவியல் ஆலோசனைகள், வேலை வாய்ப்புகள், இலவச கல்வி, ரத்ததானம், காச நோய் மற்றும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விளம்பரம் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறது.

இச்சமுதாய வானிலையில், மாணவர்களும் இணைந்து மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவ ரேடியோ ஹப் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். 

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில், 2030ல் 'இந்தியா வல்லரசாக நமது பங்களிப்பு ' என்னும் தலைப்பில் பொதுமக்கள் 50 ஆயிரம் பேர்களின் கருத்துகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இந்த கருத்து கேட்பு ஒலிப்பதிவு 2020 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நிறைவு நாள் கொரொனா எதிரொலி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மாலை ஆறு மணி வரை நேரலை நிகழ்ச்சியில் ரேடியோ ஹப் மாணவர்கள் 150 பேர் வீடிட்லிருந்தபடியே சமூக வலைதளம் மூலம் பங்கு பெற்றனர்.12 மணி நேர நேரடி நிகழ்ச்சியில் 42 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகள் முழுவதும் கொரொனா குறித்த விழிப்புணர்வும், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுப்பவர்கள், இரத்த தானம் குறித்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் கூட்டு முயற்சியில் 50 ஆயிரம் பேர்களின் ஒலிப்பதிவுகள் சாத்தியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...