திருப்பூர் அருகே மது கிடைக்காததால் சாராயம் காய்ச்சிய ஓட்டல் அதிபர் கைது - 20 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே மது கிடைக்காததால் சாராயம் காய்ச்சிய ஓட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அருகே மது கிடைக்காததால் சாராயம் காய்ச்சிய ஓட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் சாராயம் காய்ச்சப் படுவதாக எழுந்த புகாரையடுத்து ஊத்துக்குளி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, உப்பிலியன் காட்டுத்தோட்டம் பகுதியில் ஓட்டல் உரிமையாளர் பூவேந்தன் (43) என்பவர் சாராயம் காய்ச்சி வருவது கண்டறியப்பட்டது. 



இதனையடுத்து, ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீசார் பூவேந்தன் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

ஓட்டல் உரிமையாளரான பூவேந்தன் ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காமல் திண்டாடி வந்துள்ளார். இதனால் தனக்கு சொந்தமான நிலத்திலேயே சாராயம் காய்ச்ச முயன்று சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...