கோவை: கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்தபடுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த முழு நடவடிக்கையின் பேரில் சிவப்பு மண்டலத்திலிருந்து கோவை ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள் கூறும்போது;-
இதுவரை கோவையில் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து கொரோனா பாதித்து சிகிச்சை எடுத்த 2 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். கோவையில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்பட்ட 141 பேரில் தற்போது மொத்தம் 7 பேர் மட்டுமே கோவை மாவட்டத்தில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
மே 3ம் தேதிக்கு பிறகு ஊரக பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் தொழில்கள் அனுமதிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல, மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.