வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 

இந்நிலையில், முதல் கட்டமாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கினார். தொடர்ந்து அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்களை வழங்க டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனை முன்னிட்டு வால்பாறையிலுள்ள 10வது வார்டில் உள்ள 1500 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கும் பணியினை சசிக்குமார் தலைமையில் சுடர் பாலு, சாய் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் இணைந்து வீடு வீடாக வழங்கி வருகின்றனர். 

டோக்கன் வழங்கும் பணியிணை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...