கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது - கொரோனா உருவ மாதிரியை வடிவமைத்துள்ள தங்க நகை பட்டறை தொழிலாளி!

கோவை: கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது எனவும் பாம்பின் தலை பகுதியை கொரோனா வைரஸ் உருவ மாதிரி போன்று தங்க நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.

கோவை: கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது எனவும் பாம்பின் தலை பகுதியை கொரோனா வைரஸ் உருவ மாதிரி போன்று தங்க நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிகட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார்.

சிறிய அளவிலான உலக கோப்பை, எம் ஜி ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம் ஜி ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார். 

இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது. பாம்பின் தலை பகுதியை, கொரோனா வைரஸ் உருவ மாதிரியை மெழுகுவர்த்தி கொண்டு வடிவமைத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் "விழித்திரு" "விலகி இரு" "தனித்திரு" என அரசின் வேண்டுகோளை ஏற்று சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...