கேஜி மருத்துவமனையில் மத பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு..! உடனே தலையிட்டு விசாரணை நடத்த வேண்டுமென ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

கோவை: கேஜி மருத்துவமனையில் மத பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உடனே தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கேஜி மருத்துவமனையில் மத பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உடனே தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கேஜி மருத்துவமனை சிகிச்சையளிக்க முடியாது என மருத்துவமனை ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட எம்பி உடனடியாக தலையிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன் பேரில் சம்மந்தப்பட்ட கேஜி மருத்துவமனைக்கு சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான குழுவை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறுகையில், அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் பாரபட்சம் பார்க்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். இதனை மீறும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உன் தெரிவித்தார். 

இந்நிலையில், கே.ஜி மருத்துவமனையில் பெண்ணை அனுமதிக்க மறுத்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு கே.ஜி மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் அறிக்கை ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கடந்த 46 வருடங்களாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருவதாக தெரிவித்து உள்ளார்.

ஜாதி பேதமின்றி மருத்துவமனை சேவையை வழங்கி வருவதாகவும் தற்பொழுது கூட தங்களது மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரிகள் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணிற்கு காய்ச்சல் இருந்ததாக கூறியதால் கோவிட் சோதனை செய்யவோ தனிமைபடுத்தும் வார்டு இல்லாத காரணத்தால் அவரை அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டது எனவும் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...