கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் இரத்த தான முகாம்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. 

அரசு மருத்துவமனையில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர் கள் வெளியில் வர இயலாத நிலையில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மேதின நாளில் உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் என்கிற நோக்கத்துடன் சிறப்பு இரத்த தான முகமை நடத்தினர்.

கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாதர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முகாமில் ஏராளமான பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். 

இம்முகாமை மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் பங்கஜவல்லி, மரகதம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கினைத்தினர். 

இதேபோல, காரமடை பகுதியில் மாதர் சங்கத்தினர் நடத்திய ரத்த தான முகமில் மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் மெகபுனிசா, ஜீவாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆவரம்பாளையத்தில் 60 யூனிட் ரத்தமும், காரமடையில் 40 யூனிட் ரத்தம் என 100 யூனிட் ரத்தம் இம்முகாம்களில் சேகரிக்கப்பட்டது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...