கோவை உக்கடம் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

கோவை: கோவை உக்கடம் பகுதியில் மழை நீரில் மின்சாரம் கசிந்த நிலையில், துணி காயப்போடச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் மழை நீரில் மின்சாரம் கசிந்த நிலையில், துணி காயப்போடச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை உக்கடம் கோட்டைமேடு லட்சுமி நாயக்கர் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன்(42) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜொகரா(வயது 37). இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று அதிகாலை கோவையில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், ஜொகரா காலை 5 மணியவில் துணி காயப்போட சென்றுள்ளார். அந்த பகுதியில் மின்சார வயர்கள் குறுக்கும் நெடுக்குமாக தொங்கிக்கொண்டு இருந்த நிலையில் மழை நீரினில் மின்சாரம் கசிந்துள்ளது. இதனை அறியாமல் துணி காயப்போட்ட ஜொகரா மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மூர்ச்சையற்று கிடந்தார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீசார் மற்றும் தெற்கு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். குறுக்கும், நெடுக்குமாக செல்லும் மின் வயர்களை ஒழுங்குபடுத்துமாறு மின்வாரிய ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் கோட்டைமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...