உயிர் காக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள்..! யோகா நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவி!

கோவை: உயிர் காக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள் என யோகா நடனம் மூலம் கல்லூரி மாணவி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.


கோவை: உயிர் காக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள் என யோகா நடனம் மூலம் கல்லூரி மாணவி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. 

கொரோனா தொடர்பான யோகா விழிப்புணர்வு நடன வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் பயிலும் மாணவி வைஷ்ணவி சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். உடலை ரப்பர் போல வளைத்து யோகாசனம் செய்த வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில், விழித்திரு! விலகி இரு!வீட்டில் இரு! என கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மயூரி யோகாசனம் செய்தபடி மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள், கைகளை சுத்தமாக கழுவுதல், விலகி இருத்தல், மனித நேயம் வளர்ப்போம், வதந்திகளை நம்பாதீர் என யோகா நடனமாடியபடியே பதாகைகளை காண்பித்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

2019ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற முதலாவது ஆசிய யோகா போட்டியில் இந்தியா, இலங்கை, சீனா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 21 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட பேக்வேர்ட் பென்டிங் கேட்டகிரி (Backward pending category)ல் தங்கம் வென்றுள்ளார். மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் இவர் பதக்கங்களை வென்று உள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...