நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? நடிகர் சந்தானத்தின் கேள்விக்கு சத்குரு பதில்

கோவை: தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சந்தானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? ஈஷா மஹாசிவராத்திரி சர்ச்சையாக்கப்பட்டது ஏன்? என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


கோவை: தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சந்தானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? ஈஷா மஹாசிவராத்திரி சர்ச்சையாக்கப்பட்டது ஏன்? என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ ’Sadhguru Tamil’ யூ டியூப் சேனலில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 27) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பு, ஈஷாவின் ஒரு சொட்டு ஆன்மீகம், மரணம் குறித்த விழிப்புணர்வு, ஈஷாவின் மஹாசிவராத்திரி சர்ச்சையாக்கப்பட்டதன் நோக்கம் என பல விஷயங்களை சத்குரு விரிவாக பேசி உள்ளார்.

குறிப்பாக, கொரோனா பாதிப்பு மிகுந்த இச்சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என நடிகர் சந்தானம் கேட்ட கேள்விக்கு சத்குரு அளித்த பதில்:

நம் தமிழ் மண்ணில் பல ஆயிரம் தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். எந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது நம் கலாச்சாரத்துடன் சேர்ந்தே இருக்கிறது. இப்போது நாம் எதை சொன்னாலும் இது விஞ்ஞானப்பூர்வமாக இல்லை என சிலர் சொல்கிறார்கள். அவர்களுடைய மனதில் விஞ்ஞானப்பூர்வமானது என்றால் அது மேற்கத்திய நாட்டில் இருந்து வர வேண்டும் என நினைக்கிறார்கள். இவ்வளவு காலமாக நாம் புரிந்துகொண்ட விஷயங்கள் எல்லாம் விஞ்ஞானம் இல்லை.மருத்துவ ஆய்வகத்தில் பரிசோதனை செய்தால் தான் விஞ்ஞானம் என அவர்கள் சொல்கிறார்கள்.

நாம் பாரம்பரியமாக சாப்பிடும் உணவு முறையிலேயே பல விதமான தன்மைகள் உள்ளன. மஞ்சள், புளி, தேன், வேப்பிலை, கறிவேப்பிலை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே நம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. கூடுதலாக தற்போதைய சூழலில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் மல்லி ஆகியவற்றை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

பின்னர் அதில் தேன் கலந்து சாப்பிடலாம். இது கொரோனாவிற்கான சிகிச்சை முறை என்று நான் சொல்லவில்லை. ஆனால், சாதாரணமாக சளி, இருமல் தொந்தரவு வந்தாலே இதை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இவ்வாறு சத்குரு பேசியுள்ளார்.

மேலும், மஞ்சள், வேப்பிலை, மலை நெல்லிக்காய், தேன், மிளகு போன்றவற்றை தினமும் உண்பதன் மூலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்றும் சத்குரு தெரிவித்துள்ளார்.

சத்குருவுடன் நடிகர் சந்தானம் கலந்துரையாடிய வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...