கோவையில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்..! அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள்!

கோவை: கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலை மற்றும் பாலங்களுக்கு கீழ் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலை மற்றும் பாலங்களுக்கு கீழ் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 



கோவையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வெள்ளம் போன்று தேங்கி நிற்கிறது.



குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், இரயில் நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக நீர் தேங்கியது. பாலங்களில், சாலையோரங்களில், ரயில்வே பாலங்களுக்கு அடியில் தண்ணீர் 10 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது.



இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சில பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தண்ணீர் அதிகமான பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வாகன உதவியுடன் வெளியேற்றினர். கொரொனா தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தற்போது மழை பாதிப்புகளை சரிசெய்து வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...