கோவை: வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் ஊரடங்கை மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறி வால்பாறை நகருக்கு குடும்பத்துடன் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது.

இதனையடுத்து, வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் முஜீப் தலைமையில் காவல்துறையினரால் நகரில் பல இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

வால்பாறை நகருக்கு வந்த வாகனங்களை நிறுத்தி, வந்த காரணம் ஆவணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கலர் பூசப்பட்டதின்படி வால்பாறைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர்.