கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை! 100க்கும் மேற்பட்டவர்களின் சளிமாதிரிகள் சேகரிப்பு!

கோவை: கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 100க்கும் மேற்பட்டவர்களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 100க்கும் மேற்பட்டவர்களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கோவையில் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டது. 

முதல் நாளான இன்று 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனையானது நடத்தப்பட்டது.

இந்த முகாமில் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்களது சளி மாதிரிகளை பரிசோதனை செய்து கொண்டனர். சுகாதாரத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் சளிமாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த பரிசோதனையானது தொடர்ந்து இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. அனைத்து பத்திரிகையாளர்களும் தாமாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...