கொரோனா தடை உத்தரவு காலத்தில் இந்தியா முழுவதும் 2.43 கோடி பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது - இஸ்கான் ஒருங்கிணைப்பாளர்

கோவை: கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு காலத்தில் இந்தியா முழுவதும் 2.43 கோடி பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு உள்ளதாக இஸ்கான் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு காலத்தில் இந்தியா முழுவதும் 2.43 கோடி பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு உள்ளதாக இஸ்கான் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து உணவு இன்றி தவிப்பவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றது.

இந்நிலையில், கோவையில் உள்ள இஸ்கான் அமைப்பு சார்பில் கடந்த 10ம் தேதி முதல் தினமும் 1200 பேருக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர். 

இது குறித்து இஸ்கான் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறுகையில், இரத்தினபுரி, சங்கனூர் பாலம், பட்டேல் சாலை, ராம்நகர், சித்தாபுதூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாத்திரம் மூலம் உணவுகள் வழங்குவதாகவும் தண்டுமாரியம்மன் கோவில், ரயில் நிலையம், லங்கா கார்னர், கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் பாக்கெட் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், கணபதி சூர்யா மருத்துவமனை அருகில் இஸ்கான் தொண்டர்கள் மூலம் சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்த அவர், இதுவரை இந்தியாவில் இஸ்கான் அமைப்பு மூலம் இந்தியா முழுவதும் 2.43 கோடி பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அப்போது தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவு தளர்த்தும் வரை அனைவருக்கும் உணவு கிடைத்திட தங்களது அமைப்பு இந்த பணிகளை தொடரும் என்றார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...