தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கோவை, நீலகிரியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை! திருப்பூரில் மேலும் இருவருக்கு பாதிப்பு!

கோவை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆக இருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 64 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 64 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1885ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 60 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதன் தற்போது மூலம் தற்போது வரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு 523 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கோவை மற்றும் நீலகிரியில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 141 ஆக உள்ளது. 

அதேசமயம், திருப்பூரில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...