நீலகிரி: குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட தெங்குமாரடா பழங்குடியினர் கிராமம் மற்றும் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆயிரத்து நானூறு பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்திராமு தனது சொந்த செலவில் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தெங்குமாரடா பழங்குடியின கிராமத்திற்கு செல்ல உதகை, கோத்தகிரி ஆகிய பகுதிகளிலிருந்து, கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களான பவானி சாகர் வழியாக மட்டுமே செல்ல முடியும். சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் கரடு முரடான சாலை வழியாக சுமார் 2 மணி நேர பயணத்திற்கு பிறகே சென்றடைய முடியும்.
144 தடை உத்தரவினால் தெங்குமாரடா கிராம மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைபடுத்தி கொண்டுள்ளனர். இவர்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளை பூர்த்தி செய்ய 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திய மங்கலம் தான் வர வேண்டும்.

இந்நிலையில், தெங்கு மாரடா பழங்குடியின கிராமத்திற்கு பெரும்பாலும் யாரும் செல்ல முடியாத நிலையில், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு 5 டன் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை சுமார் 120 கிலோ மீட்டர் பயணித்து பழங்குடியின மக்களுக்கு 18 வகையான தொகுப்பு காய்கறிகள் சொந்த செலவில் வழங்கினார்.
மேலும், தெங்கு மாரடா பஞ்சாயத்தில் பணி புரியும் தூய்மை பணியாளர்களை கெளரவ படுத்தி அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி ஆகிய அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதேபோல, குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் ராணுவப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என மொத்தம் ஆயிரத்து நானூறு பேருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டது.
வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பி. பலிச்சா, சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.