ஒரு ரூபாய் இட்லி பாட்டியுடன் வீடியோ அழைப்பில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

கோவை: ஒரு ரூபாய் இட்லி என்றால் நம் கண்முன்னே வந்து செல்பவர் கமலாத்தாள் பாட்டி. இட்லி பாட்டி என்றாலே தமிழகம் மட்டுமல்ல தேசம் முழுவதுமுள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

கோவை: ஒரு ரூபாய் இட்லி என்றால் நம் கண்முன்னே வந்து செல்பவர் கமலாத்தாள் பாட்டி. இட்லி பாட்டி என்றாலே தமிழகம் மட்டுமல்ல தேசம் முழுவதுமுள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். 

எவ்வளவு புகழ் வந்தாலும் யதார்த்தமாக நம்மை பார்த்து கை அசைத்து ஒரு குழந்தையை போல துள்ளி குதித்து வந்த பாட்டியை நம்மால் மறக்க முடியாது.

கொரொனா எதிரொலி காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொட்டுக்கடலை, உளுந்து தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், மிளகாய் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் புன்னகை மாறாமல் எப்படியாவது சமாளித்து ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில், தன்னை தேடி பல பேர் வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்களை கொடுத்து வருவதாகவும் மற்றவர்கள் செய்யும் உதவியை தான் என்றும் மறக்க மாட்டேன் என தெரிவித்தார். 85 வயதானாலும் சுறுசுறுப்புக்கு உதாரணம் இட்லி பாட்டிதான் என்னுமளவுக்கு நமக்கும் உற்சாகத்தை கொடுக்கும், மனிதநேயமுள்ள அவரது அன்பு அவரிடம் வருகின்ற அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 

இட்லி பாட்டி வீட்டிற்கு பொருட்கள் வழங்க சென்ற போது செல்போனில் வீடியோ காலில் இருந்தார் இட்லி பாட்டி. யார் என்ற ஆவலில் அருகே சென்று பார்த்த போது என்ன வயசு உங்களுக்கு என இட்லி பாட்டியிடம் அவர் கேட்டதும் 85 என உடனே பதில் சொன்னார். மேலும், கமலாத்தாள் தானே உங்க பேரு என கேட்டதற்கு ஆம் என்று பதில் சொன்னார். உங்க கூட யார் இருக்காங்க என கேட்ட பொழுது தனது மகன் மற்றும் பேரனுடன் இருப்பதாக பாட்டி பதிலளித்தார். உதவி என்ன வேணும் என கேட்டதற்கு, கேஸ்க்கு பணமும், அரிசி பருப்பும் கொடுத்தாங்க என சொன்ன பாட்டியிடம் உடலை நன்றாக பார்த்துக்கொள்ள சொன்னார். எதிர் முனையில் பேசியவர் வேறு யாருமில்லை, அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின்.



மு க ஸ்டாலினிடம் பேசிவிட்டு வந்த பாட்டிக்காக காத்திருந்த போது ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் இட்லி பாட்டிக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளை வழங்கினார். பிரசாத் உத்தமன் பாட்டிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். 

இது குறித்து பிரசாத் உத்தமன் பேசுகையில், இட்லி பாட்டி 85 வயதிலும் அன்னதானம் செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கொரொனா எதிரொலியால் மளிகை பொருட்களின் விலையேற்றம் வந்தாலும், சமாளித்து 400 பேருக்கு உணவளித்து வருவது பாராட்டத்தக்கது எனவும் அவருக்கு தங்கள் நிறுவனத்தின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி இருப்பதாக கூறிய அவர், தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...