திருப்பூரில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு..! உத்தரவை மீறி வெளியில் வரும் வாகனங்களை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலான நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலான நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்க தமிழக அரசு திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சியில் இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக காவல்துறையினர் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

முழு ஊரடங்கு காலத்தில் வெளியே வரும் நபர்களை கண்காணிக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை தீவிர வாகன தணிக்கை செய்யப்போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...