குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் கொரோனா தொற்று குறித்த பரிசோதனை இன்று துவக்கம் - நிர்வாக இயக்குனர் சிவக்குமார்

நீலகிரி: தெற்காசியாவில் புகழ்பெற்ற மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் 8 மணி நேரத்தில் 80 காெராேனா பாதிக்கப்பட்டவர் குறித்து ஆய்வு அறிக்கை தர முடியும் என்று பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் சிவக்குமார் கூறியுள்ளார்.


நீலகிரி: தெற்காசியாவில் புகழ்பெற்ற மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் 8 மணி நேரத்தில் 80 காெராேனா பாதிக்கப்பட்டவர் குறித்து ஆய்வு அறிக்கை தர முடியும் என்று பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் சிவக்குமார் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனம் மத்திய அரசின் ஒப்புதலுடன் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரிசோதனை மேற்கொள்வதற்காக பரிந்துரை செய்யப்பட்டது. 

இந்த நிறுவனத்தில் 1907 முதல் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டதோடு நோய்க்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. 



இந்த ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகமாக மாற்ற கடந்த சில வாரங்களுக்கு முன் பரிந்துரைக்கப்பட்டது. இதில், கொரோனா பரிசோதனைக்கான ரியல் டைம் பாலிமரைஸ் செயின் ரியாக்கஸன் எனப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் உட்கட்டமைப்பு உபகரணங்கள் உள்ளதால் மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர் ஒப்புதலுடன் இங்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்ய தயார்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த நிலையில் இன்று மட்டும் 45 காெராேனா வைரஸ் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதன் முடிவுகள் மாவட்ட சுகாதார துறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து நோய் தொற்று ஒருவருக்கு உள்ளதை உறுதிப்படுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். 

நீலகிரியில் முதல் முறையாக துவங்கப்பட்ட இந்த காெரோனா ஆய்வின் மூலம் காேவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆய்வு கூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பி ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க முடியும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் மேற்காெள்ள வசதியாக இருக்கும் என்று பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...