வால்பாறையில் திமுக சார்பில் வாழைத்தோட்டம் பகுதி மக்களுக்கு காய்கறி வழங்கும் நிகழ்ச்சி

கோவை: வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருவாயின்றி தவித்து வரும் நலிவுற்ற மக்களுக்கு திமுக சார்பில் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருவாயின்றி தவித்து வரும் நலிவுற்ற மக்களுக்கு திமுக சார்பில் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எவ்வித தொழில்களும் செய்யமுடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். 



வருவாயின்றி தவித்து வரும் மக்களுக்கு வால்பாறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் நலிவுற்ற மக்களுக்கு காய்கறிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

வால்பாறை தேர்தல் சிறப்பு வட்டாட்சியர் ஆர்.மூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் காய்கறி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

வால்பாறை நகர தி.மு.க பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் செல்வம், அம்பிகை சுப்பையா இகா பொன்னுச்சாமி டென்னிஸ், செந்தில், ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...