என்மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை ஸ்டாலின்‌ நிறுத்திக்கொள்ள வேண்டும்‌ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: என்மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை ஸ்டாலின்‌ நிறுத்திக்கொள்ள வேண்டும்‌ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: என்மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை ஸ்டாலின்‌ நிறுத்திக்கொள்ள வேண்டும்‌ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கோவையைச் சேர்ந்த செய்தி இணையதள நிறுவனர் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் ஸ்டாலின் தொடர்ச்சியாக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உலகையே உலுக்கிக்‌ கொண்டிருக்கும்‌ கொரோனா வைரஸை தடுக்கும்‌ பணியில்‌, இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. அதே போல்‌ தமிழகத்தில்‌ முதல்வர்‌ அருமை அண்ணன்‌ எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ நடத்தும்‌ அம்மா ஆட்சியும்‌, கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கைகளை மாநகரம்‌ முதல்‌ குக்கிராமம்‌ வரை தீவிரப்படுத்தியதில்‌ தமிழகம்‌, மற்ற மாநிலங்களுக்கெல்லாம்‌ முன்னோடியாக திகழ்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில்‌ எங்கள்‌ கழக அரசுக்கு கிடைத்த மக்கள்‌ ஆதரவை பார்த்து, பொசுங்கிப்‌ போன பொறாமை பிடித்த எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ ஸ்டாலின்‌, என்ன செய்வதென்று தெரியாமல்‌, வாய்க்கு வந்ததை பேசுவதையும்‌, கண்டதையும்‌, காணாததையும்‌ நினைத்து வெற்று அறிக்கை வெளியிடுவதை காலை கடமை போல வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்‌. 

இந்த காலகட்டத்தில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ளாட்சித்துறை மூலம்‌ எவ்வளவு பணிகள்‌ நடக்கின்றன, தேவைகள்‌ என்ன போன்றவற்றை ஆய்வுக்‌ கூட்டங்கள்‌ நடத்தி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறேன்‌. 

சென்னை, கோவை, நீலகிரி மாவட்டங்களில்‌ கொரோனா தடுப்பு பணிகளை எவ்வளவு தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறேன்‌ என்பதை மக்களும்‌ அனைத்து ஊடகங்களும்‌ அறிவார்கள்‌. என்னை பற்றிய எந்த பொய்ச்செய்திகளுக்கும்‌ எள்ளளவும்‌ நான்‌ கவலைப்படுவதில்லை.

பேரிடர்‌ காலத்தில்‌ விஷமத்தனமாக பொதுமக்களை அரசு நிர்வாகம்‌ மற்றும்‌ மாநகராட்சி பணியாளர்களுக்கு எதிராக திருப்பும்‌ முயற்சியாக ஆதாரமற்ற செய்திகளை பரப்பும்‌ நோக்கில்‌ செயல்பட்டு வந்த ஒரு வலைதளத்தின்‌ சமூக ஊடகப்பக்கங்களில்‌ பதிவிட்டிருந்த அவதூறான விஷம செய்திகள்‌ குறித்து மாநகராட்சி அரசு ஊழியர்‌ ஒருவர்‌ அளித்த புகாரின்‌ பேரில்‌ காவல்துறை அந்த வலைதள உரிமையாளர்‌ மீது பேரிடர்‌ கால சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்‌.

சம்பந்தப்பட்ட வலைதளத்தின்‌ பேஸ்புக்‌, ட்விட்டர்‌, இன்ஸ்டாகிராம்‌ பக்கங்களைப்‌ பார்வையிட்டபோது பேரிடர்‌ சமயத்தில்‌ அரசாங்கத்திற்காக உழைத்திடும்‌ மருத்துவர்கள்‌, மருத்துவப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ரேஷன்‌ கடை ஊழியர்களை அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிட்டு வேலைநிறுத்தம்‌ மற்றும்‌ போராட்டத்தில்‌ ஈடுபட வைப்பது போன்ற விஷமத்தனமான பொய்யான செய்திகளை குறிப்பிட்டிருந்ததால்‌, இக்கட்டான இச்சூழலில்‌ பொதுமக்கள்‌ பாதிப்புக்குள்ளாவார்கள்‌ என்று மாநகராட்சி அரசு ஊழியர்‌ ஒருவர்‌ அந்த வலைதளத்தின்‌ உரிமையாளர்‌ மீது புகார்‌ அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்‌.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...