கோவை: யோகாசனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்காக நடனமாடி அசத்தும் பள்ளி மாணவியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை: யோகாசனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்காக நடனமாடி அசத்தும் பள்ளி மாணவியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு வைஷ்ணவி என்ற மகள் உள்ளார். திருப்பூரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் 9ம் பகுப்பு பயின்று வந்த நிலையில் இளம் சாதனையாளர் விருது நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது.
இதில் மாணவி வைஷ்ணவி கலந்து கொண்டு அனைத்து யோகாசனங்களையும் சிறப்பாக செய்து காண்பித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனை கண்ட பார்க் கல்லூரி நிறுவனங்களின் உரிமையாளர் அனுஷா ரவி கருமத்தம்பட்டியில் உள்ள பள்ளியில் இலவசமாக பயில அனுமதி அளித்துள்ளார்.
தற்போது கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி பார்க் குளோபல் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கொரோனா குறித்த விழிப்புணர்வை எற்படுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு ஏற்ப யோகா செய்து கொண்டே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி வைஷ்ணவி 2018-2019 ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார். மேலும் இவர் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, சீனா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற யோகாவில் பங்கேற்று பதக்கங்களையும் பெற்று உள்ளார். இதுவரை 250க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ள வைஷ்ணவி 18 சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று உள்ளார்.
ஹாங்காங் தமிழ் சங்கம் சிறந்த மாணவர் விருது வழங்கி கௌரவித்தது. தற்சமயம் கொரோனா உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்து உள்ள வேளையில் பல்வேறு தரப்பினர் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு தங்கள் பாணியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாணவி வைஷ்ணவி தனக்கே உரிய பாணியில் யோகாவின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிரமமான பல்வேறு யோகாவை விழிப்புணர்வு பாடலுக்கு ஏற்ப செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.