கோவையில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர். 

கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. 144 தடை உத்தரவு காரணமாக கல்லூரிகள் இயங்கவில்லை. 

மேலும், தன்னார்வலர்கள் வெளிவர இயலாத நிலையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைகள் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்ததான முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர். 



கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். இம்முகாமை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி துவக்கி வைத்தார். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...