குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் குனியமுத்தூர் காவல்நிலையம் தற்காலிகமாக மூடல்!

கோவை: குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் உயிரிழப்புகள் மற்றும் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளை தாண்டி வெளியே சுற்றி திரிபவர்கள் மீறி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகர போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் மூன்று பேர் போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்கள். இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிகமாக போத்தனூர் காவல் நிலையம் வேறு இடத்தில் சில நாட்களுக்கு இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார். 6 பேரில் ஒருவர் குனியமுத்தூர் காவல்நிலையம், ஒருவர் ஆயுதப்படை, ஒருவர் போக்குவரத்து புலனாய்வு மற்றவர்கள் போத்தனூர் காவல்நிலையம் சேர்ந்தவர்கள் ஆவர். 



இந்நிலையில், குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்த காவல் நிலையம் குனியமுத்தூர் குமரன் மஹாலில் செயல்படுகின்றது.

நேற்று போத்தனூர் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில் இன்று குனியமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...