கோவை: வால்பாறையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1000 மற்றும் காய்கறிகள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் பரவாமல் தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் நடைபெறவில்லை, ஆட்டோக்கள் டாக்சிகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளதாலும் திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதாலும் நாதஸ்வர கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

இதனால் தொழில் இல்லாமல் வாடி வரும் கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ டாக்சி லாரி, டெம்போ ஓட்டுனர்கள், நாதஸ்வர வாத்திய குழுவினருக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஒவ்வொருவருக்கும் நிவாரண உதவியாக தலா ஆயிரம் ரூபாயும் காய்கறி பைகளை வழங்கினார். சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து நிவாரணத்தை வாங்கிச்சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, வாசு, நகர செயலாளர் மயில் கணேசன், சலாவுதீன், பொன்கனேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.