பத்திரிகையாளர்களை மிரட்டுவதன் மூலம் மருத்துவத் துறையினர் எதிர்கொண்ட பிரச்சினைகளை மறைக்க முடியாது - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

கோவை: மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை: மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய உதவிகள், தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்கின்ற செய்தியை ஒளிபரப்பியதற்காக நேற்றைய தினம் கோவையில் சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின்(simplicity web media) நிருபர்கள் இருவரை கோவை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். 

பின்னர் பல மணிநேரத்திற்கு பின்பு அவர்கள் இருவரையும் விடுவித்த காவல்துறையினர் அச்செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை கைது செய்தனர். 

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை மிரட்டுவதன் மூலம் கொரோனாவால் மருத்துவத் துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைத்துவிடலாம் என கருதுவது பயனளிக்காது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும், மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக கோவையில் கைது செய்யப்பட்டுள்ள இணையதள செய்தியாளர் ஆண்ட்ரூவை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...