கோவை: கோவையில் தற்போதுள்ள பேரிடர் சூழ்நிலையில் பத்திரிகைக்கு உள்ள கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமையையும் கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய உதவிகள், தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்கின்ற செய்தியை ஒளிபரப்பியதற்காக நேற்றைய தினம் கோவையில் சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின்(simplicity web media) நிருபர்கள் இருவரை கோவை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.
பின்னர் பல மணிநேரத்திற்கு பின்பு அவர்கள் இருவரையும் விடுவித்த காவல்துறையினர் அச்செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், இச்செயலானது தற்போதுள்ள பேரிடர் சூழ்நிலையில் பத்திரிகைக்கு உள்ள கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமையையும் கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், கோவை மாவட்ட காவல் துறையின் இத்தகைய நடவடிக்கையை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதாகவும் இது போன்ற கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்களிலும் அரசு உடனடியாக தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.