தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கோவையில் புதிதாக 7 பேர் பாதிப்பு!

கோவை: தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது.

கோவை: தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக இருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 72 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 72 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று மட்டும் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு 452 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கோவையில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 114 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தற்போது மூலம் தற்போது வரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், திருப்பூர் மற்றும் நீலகிரியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும், நீலகிரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. 

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...