கோவை: கோவையை அடுத்த சின்னியம்பாளையத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாதேவி கொரானா உயிர்க்கொல்லி நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பி.என்.காலனி பகுதி பொதுமக்களுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள காய்கறி தொகுப்புகள் மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.
மேலும், அங்குள்ள மளிகைக் கடைகள், ஆசிரியர் காலனி, அரிஜன காலனி உள்ளிட்ட பகுதிகளில் கொரானா உயிர்க்கொல்லி நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், வீட்டிலேயே இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.
கள ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, ஷீலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி தேவராஜன், துணைத் தலைவர் ஜோதி கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.