கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2300 ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2300 ஏழை எளிய குடும்பங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2300 ஏழை எளிய குடும்பங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 

கொரோனா தொற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் என திமுகவினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டிற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம், விஜி.ராவ் நகர், இந்திரா்நகர் குடிசை பகுதி உள்ளிட்ட பகுதியில் ஏழை எளிய அருந்ததியினத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 40வது வார்டு செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், 53வது வார்டு சித்தாப்புதூர் குடிசை பகுதிகளில் 550க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு வார்டு செயலாளர் சசிக்குமார் தலைமையில் அரிசி, காய்கறிகள், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். 

அதேபோல, சிங்காநல்லூர் பகுதி கழகம், 58வது வார்டு செட்டியார் தோட்டம், எம்ஜிஆர்.நகர் குடிசை பகுதிகளில் வசிக்கும் 350 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றையும், பீளமேடு பகுதி கழகத்திற்கு உட்பட்ட 56 வது வார்டில் வார்டு செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஹட்கோ காலனியில் அரிசி, கபசுரா கச்சாயம் போன்றவற்றையும் சிங்காநல்லூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 74வது வார்டு குளத்து வாய்க்கால் சாலைப் பகுதி, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன் தலைமையிலும் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர், உணவு சரியான முறையில் கிடைக்கின்றதா? என்பது குறித்து கேட்டறிந்தார். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...