கோவையில் ஊடக உரிமையை பறிப்பதை கண்டித்து வாய்க்கு பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்கள்..!

கோவை: கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக உரிமையை பறிப்பதை கண்டித்து வாய்க்கு பூட்டு போட்டு முகமூடி அணிந்து தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக உரிமையை பறிப்பதை கண்டித்து வாய்க்கு பூட்டு போட்டு முகமூடி அணிந்து தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். 

கோவையிலிருந்து செயல்படும் சிம்ப்ளிசிட்டி என்ற டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு வர சொல்லி 8 மணி நேரத்திற்கு மேலாக காவல் நிலையத்தில் வைத்திருந்து கோவை பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏறடுத்தியது.

கோவை மாநகராட்சியை சேர்ந்த துணை ஆணையர் சுந்தரராஜன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, ரேஷன்கடை ஊழியர்கள் திருடுவதாக வெளியான செய்தியையும் வெளியிட்டது. 

இதனை கண்ட துணை ஆணையர் தனது புகாரில் சுட்டிக்காட்டி இந்த இரண்டு செய்திகளும் அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராக போராடுவதற்கு தூண்டும் வகையில் இருப்பதாகவும் இதனை நேற்று காலை சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால்ட் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜியை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை பெரும் குற்றம் செய்த குற்றவாளிகள் போல் யாரையும் சந்திக்கவிடாமல் பல மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு சென்ற கோவை பத்திரிகையாளர்களிடம் கூட அவர்கள் எதற்காக விசாரணைக்காக அழைக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை காவல்துறையினர் கூற மறுத்தனர். இறுதியாக, இரவு 7 மணியளவில் நிருபர் மற்றும் புகைப்பட கலைஞரை விடுவித்த காவல்துறையினர் சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியனை கைது செய்தனர்.

மேலும், அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 

மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்ட வசதி குறைபாட்டை சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று மருத்துவ மாணவர்கள் சங்கம், கோவை மருத்துவக் கல்லூரியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டது.

அதேபோல், மக்களுக்கு சென்று சேரவேண்டிய ரேஷன் பொருட்கள் திருடுபோவதையும் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தின்படி தனது பணியை செய்த பத்திரிகையாளரை கைது செய்துள்ளது. அரசியல் சாசனத்தை மதிக்காத செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். 



ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் மறைமுகமாக மிரட்டும் செயல் என்றும் அடிப்படையில் இது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை என்று ஆதங்கப்படும் ஊடக அமைப்புகள் சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள், கோவை பத்திரிக்கையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக உரிமையை பறிப்பதை கண்டித்து வாய்க்கு பூட்டு போட்டு முகமூடி அணிந்து தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...