கோவையில் மருத்துவ பணியாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? - கமல்ஹாசன்

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை, மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என குறைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை, மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என குறைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 



கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

இது அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராக போராடுவதற்கு தூண்டும் வகையில் இருப்பதாக கூறி கோவை மாநகராட்சி துணை ஆணையர் சுந்தர்ராஜ் என்பவரின் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, காவல்துறையினர், சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியனை கைது செய்துள்ளனர். அவர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த நிலையில், பத்திரிகைத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கும் நிலையில், கோவையில் மருத்துவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை எனவும் கொரோனா நிவாரண உதவிகள் மக்களுக்கு சென்றடையவில்லை எனவும் உண்மையை சுட்டிக்காட்டியதற்காக சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் சாம் ராஜா பாண்டியன் கைது செய்யப்பட்டது சர்வதிகாரம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையை முடக்காமல், தமிழக அரசு மற்றும் காவல்துறை சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற வேண்டும் எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...