கோவை, சென்னை, மதுரையில் வரும் ஏப்ரல் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு- முதலமைச்சர் பழனிசாமி

கோவை: சென்னை, கோவை, மதுரை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம்போல செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கோவை: சென்னை, கோவை, மதுரை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம்போல செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை, கோவை, மதுரையில் முழுமையான ஊரடங்கு வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஞாயிறு காலை 6 மணி முதல், புதன் கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முழுமையாக 26ஆம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல், 28ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்:-

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய், மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

அதேசமயம், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...