கோவையில் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட ஆணையர் உத்தரவு

கோவை: கோவை அடுத்த போத்தனூரை சேர்ந்த 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை அடுத்த போத்தனூரை சேர்ந்த 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால், மருந்து பொருட்கள் மற்றும் இறைச்சி தவிர மற்ற வியாபாரங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இருபது ஆயிரத்தை கடந்துவிட்டது. 

இந்த நிலையில், கோவை மாநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் போத்தனூரை சேர்ந்த 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, 3 பேரும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிகமாக போத்தனூர் காவல் நிலையம் வேறு இடத்தில் சில நாட்களுக்கு காவல்நிலையம் இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

போத்தனூரை சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...