கோவையில் செய்தியாளர்களின் கைது நடவடிக்கைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்!

திருப்பூர்: கோவையில் செய்தியாளர்களின் கைது நடவடிக்கைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர்: கோவையில் செய்தியாளர்களின் கைது நடவடிக்கைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கோவையில் சிம்பிளிசிட்டி இணையதள செய்தி சேனலில் பணியாற்றிவரும் செய்தியாளர் ஜெரால்டு மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோரை இன்று கோவை வெரைட்டி ஹால் காவல்துறையினர் எந்தவித காரணமும் இன்றி கைது செய்து வைத்துள்ளனர். 

இதுகுறித்து கோவை செய்தியாளர்கள் காவல்துறையிடம் பலமுறை கேட்டும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேபோல், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் இருந்து கைதுக்கான காரணம் தெரிவிக்காமலே இருவரையும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அலைக்கழித்துள்ளனர். 

கொரானா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செய்தி பணியை மேற்கொண்டு வரும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கோவை மாநகர காவல்துறையின் இந்த செயல்பாட்டினை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இருவரையும் விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...