கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பம்ப்செட் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால், மருந்து பொருட்கள் மற்றும் இறைச்சி தவிர மற்ற வியாபாரங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பம்ப்செட் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பம்ப்செட் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.